Sunday, June 13, 2010

நிழலா................ நிஜமா............

நிஜமாய்ப் பார்க்கிறேன்
நிழலாய்த் தெரிகிறாய்
இது தான் காதல
முன் ஜென்ம சாபமா

மலராய் நீயிருக்க- அதன்
மணமாய் நானிருந்தேன்
பார் மேல் நீ நடக்க- உந்தன்
பாதச்சுவடாய் நானிருந்தேன்

என் பேனா மையினிலே
நான் உன்னைக் கண்டாலே
என் வார்த்தை வரிகளெல்லாம்
கவியாக மாறிடுதே

மழையுடனே இடியாக
எனைத்தாக்கிச் சென்றாயோ
இதயத்தில் துடிப்பிருக்க
எனை சொர்க்கம் செர்தாயோ

உன் ஒரு சொல் ஏங்கி
உயிர் வாழ்கிறேன்
உன் மௌனம் என்னைக்
கொல்கிறதே

உன் நிஜமெது
நிழலேது
நானறியேன்!!!

2 comments:

  1. Nice friend!!!
    WHo is that lucky guy!!!!!!!"???????

    ReplyDelete
  2. A guy's feeling.....
    Not mine.......
    :P--(siriya katpanai)

    ReplyDelete