Saturday, December 5, 2009

நட்பு

யுகம் கடந்த பந்தம்!
நிழலாய்த் தொடரும் வேகம்!
என்றும் தீராத் தாகம்!
தீர்ந்தால் வெறும் சோகம்!

பூக்கின்ற பூக்களைத் தேனீக்கள் வந்து தாலாட்ட.......
மாய்கின்ற மலர்கள் தமைத் தென்றல் வந்து தாலாட்ட.........
விழிக்கின்ற மழலைகளை ஓசை வந்து தாலாட்ட..........
நம் நட்பிற்காக மறுஜென்மம் எடுத்து என்னைத்தாலாட்ட வரவேண்டும் நண்பா......!!!

'நண்பன் என்பவன் நட்பின் உயிர்நாடி ............நட்பு என்பது உயிரின் ஆணி வேர் ....'



"மண்ணைத்தாண்டி..............
விண்ணை நோக்கி.................."

இத்தனை நாளிகைகளில்
எட்டாக்கனியாக இருந்த நட்பு,
எட்டியது
ஒரு நொடி முன்னரே..........
மறு நொடியில்
என் உயிரிற்கு உத்தரவாதமற்றுப்போனதேனோ?

உளமாறப் பழகியது
ஒரு நொடியே...........

விட்டு பிரிவதற்கு - நட்பு
கோவின் கவசமல்ல,
சுவாசம் ..........
வெட்டி விடுவதற்கு - நட்பு
நகக்கணுக்களல்ல,
உதிரம்..........

இத்தனையையும் தாண்டியது நாளிகைகள்..........................

என்று நான் நட்பை நேசித்தேனோ........
அதை எண்ணி உணர்ந்து யாசித்தேனோ .................
அன்று,
இறைவனும் என்னை
நண்பனாக நேசித்தான் போல...............
அழைக்கின்றான்........
விடைபெற்றுச் செல்கின்றேன்..........
நேசித்த நண்பர்களிடமிருந்து..........
சுவாசித்த நட்பிடமிருந்து அல்ல..........

புதிய நட்பைத் தேடி.......
என் மண்ணைத் தாண்டி.......
விண்ணை நோக்கி.......


என் வாழ்வின்
இறுதி நொடிப்பொழுதில்

என் இதயத்தின்
இறுதிப்பார்வையால்........
கண்கள் கதை பேச........
விழிகளால் சிந்திய கண்ணீர்த்துளிகள்
கவிதை வரிகளாயினவோ...............................................
-மரணத்தின் ஏக்கம்-
(சிறிய கற்பனை )